நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312.)
"வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்' என்று கூறுவர். தெனாலிராமன் கதைகள் படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வராமல் இருக்காது. இந்நூலில் 46 கதைகள் உள்ளன. நூலாசிரியரின் எளிய தமிழ் நடையில், அனைவரும் படித்துச் சிரிக்க முடியும்.
தெனாலிராமன் காளியிடம் வரம் பெறுவதில் (பக்.16) துவங்கி தெனாலிராமன் பாம்பு கடித்து இறந்தது கண்டு மன்னர் அழுதாராம். படிக்கும் நம் கண்களும் கலங்குகின்றன (பக்.312)
தெளிவான அச்சும், நல்ல கட்டுமானமும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. அனைவரும் படித்து சிரிக்க வேண்டிய நூலாகவும், குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூலாகவும் அமைந்துள்ளது.