நூலாசிரியர்: கோரி. வெளியீடு: இருவாட்சி, 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. (பக்கம்: 279.)
எழுத்தாளர் கோரியிடம் இலக்கிய தாகமும் இருக்கிறது; இலட்சிய வேகமும் இருக்கிறது. பலன் - மணி, மணியான சிறுகதைகள். 27 கதைகள் இருக்கும் இந்தத் தொகுதியில் கோஹினூர் வைரமாக ஜொலிக்கும் கதை. மழையும், மழலையும், வாடிய பயிரையும் வீடு தோறும் இரந்தும் பசியாத மானுடரையும் கண்டு வருத்தப்பட்ட வடலூர் வள்ளலாரின் வாரிசாக - கோரி என்ற தமிழனை, நாம் இனம் காணுகிறோம். இந்தக் கதை என்றும் கோரியின் பெயர் சொல்லும்!
"கொல்லத்தான் நினைக்கிறேன்' கதையைப் படிக்கும்போது இவர் சுஜாதாவின் வாரிசோ? என்று வியக்கிறோம். கதைகளில் உரையாடல்களுக்கு இவர் அதிக முக்கியம் தருவதால் கதைகளை ஆபாசமின்றிப் படிக்க முடிகிறது.
அற வழி செல்லும் ஒரு இளைய தலைமுறையை உருவாக்க வல்ல தூய்மையான எழுத்து!