அலைகள் வெளியீட்டகம் கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 272).
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் வி.என்.ராகவன் தந்துள்ளார். இந்தியத் தத்துவ இயஅலைகள் வெளியீட்டகம்ல் ஆழ நெடுங்கடல். அதை வெகு எளிதில் புரிந்து கொள்வது கடினம். தத்துவ விமர்சகர்கள் இந்தியத் தத்துவ இயலைப் பற்றி பல்வேறு சாதக, பாதக ஏற்புடைய முரண்பட்ட சரியான தவறான கருத்துக்களை மையப்படுத்தி விமர்சித்து வருகின்றனர். மூல நூலாசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா உலகளாவிய பிரபலமானவர், நல்ல ஆய்வாளர், சிந்தனையாளர், சீர்திருத்த, மார்க்சிய சித்தாந்தத்தில் ஆழப் புலமை கொண்டவர்.இந்தியத் தத்துவங்களில் காணப்படும் பல்வேறு விவரங்களை எளிய முறையில் சுருக்கமாகத் தந்துள்ளார் ஆசிரியர். எளியது எனக் கூறினாலும், எளிதில் படித்துப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. "இந்தியத் தத்துவத்தின் வளர்ச்சி' எனத் தொடங்கி "லோகாயதம்' என 28 தலைப்புகளில் ஓர் ஆய்வு நூலைத் தந்துள்ளார். தத்துவ இயலில் அக்கறை கொண்ட அனைவரும் படித்துணர்ந்து பயன் பெறக்கூடிய ஒரு நல்ல ஆய்வு நூல்.