1. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா: மா. இரவிச்சந்திரன்; 2. பு.ஆர்.இராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்: ச.இலட்சுமி நாராயணன்; 3. மறைமலை அடிகளாரின் நாக நாட்டரசி குமுதவல்லி: மா.இரவிச்சந்திரன்; 4. அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்: ச.இலட்சுமி நாராயணன்; 5. தமிழ்த் தென்றல் திரு.வி.க.,: சூர்யராஜன்; 6. கல்கியின் அலை ஓசை: பிரபஞ்சன்; 7. சூர்யராஜனின் ஊற்று நீர்: சூர்யராஜன்.
வெளியிட்டோர்: மேற்கூறிய ஏழு புத்தகங்களையும் வெளியிட்டோர் சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40.
அனைத்து நூல்களும் "சுருக்கப் படைப்பு'.அக்காலத்தில் தமிழ்நாட்டு வாசகர்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற, புகழ்பெற்ற புதினங்கள் அனைத்தும், மறு பதிப்பாக அதிலும் சுருக்கப் பதிப்பாக வெளியிட்டிருக்கும் சுரா பதிப்பகத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஐநூறு பக்கம், அறுநூறு பக்கம் என்று விலாவாரியாக படித்து ரசித்த நாவல்களை, இக்கால தலைமுறையினரும் படித்து, ரசிக்க வேண்டி வகை செய்துள்ளனர். படிப்பு, வேலை என்று இயந்திரம் போல் உழலும் வாழ்க்கையில் நாவல்களை படிக்க நேரமேது இவர்களுக்கு!
சுருக்கப் பதிப்புகளாக வெளியிட்டிருப்பதால், விலையும் ரூ. 40க்கே விற்பதால், இனி அனைவரும், காலத்தால் அழியாத நாவல்களை படித்து ரசிக்க முடியுமே!