விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95).
ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.