நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 128).
பண்புயர படிக்க வேண்டிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், காமராஜர் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்.அவரது இனிய சமூக - தேசிய - வாழ்வில் இனிமையான 100 தகவல்கள், செய்திகள், நிகழ்ச்சிகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. திருமணம் செய்யாதது ஏன்? (பக்.15), மதிப்பு கொடுப்பவர் (பக்.17), ஆகட்டும் பார்க்கலாம் (பக்.19), வாடகை வீட்டில் இருந்தவர் (பக்.49), இலவசக் கல்வி (பக்.98), ஏன் வரி போடுகிறேன் (பக்.108) போன்றவை சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்.வாசகர்கள் ஒருமுறை படித்து நிறுத்த மாட்டார்கள். ஒன்று - இரண்டு சம்பவங்களை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க மாட்டார்கள்.