கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312).
"ஹிம்மத்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்.எம்.லாலா, அவர் சந்தித்த பிரபலமான 26 பேருடைய தரமான வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் தந்துள்ளார் ராணி மைந்தன்.
"நான் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் சமூகத்திலிருந்து பெற்றதை சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும் என்பது தான் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது' அஸிம் பிரேம்ஜியின் உணர்வு இது.
"பிரார்த்தனையின் அழகிய விளைவு மவுனம். வாய் மவுனம் மட்டுமின்றி இருதயம், கண்கள், காதுகள், மணம் ஆகியவற்றின் மவுனம் பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை நான் ஐந்து மவுனங்கள் என்பேன்' என உபதேசித்தார் அன்னை தெரசா.
"ஏழைகளுக்காக பணியாற்றுவது உள்பலம் தருகிறது. அவர்கள் குப்பையில் இருக்கும் மாணிக்கங்கள்' என்பார் எம்.எஸ்.சுவாமிநாதன்.
"தினமும் காலையில் ஒரு நல்ல நூலைப் படித்து விட்டு அந்த நாளைத் தொடங்கு' நானி பல்கிவாலாவின் அறிவுரை இது. இவ்விதமாக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குறிப்புகளும் சிந்தனைகளும் அழகுற எழுதப்பட்டுள்ளன. இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்.