கிழக்குப் பதிப்பகம், 16, கற்கபகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 118. விலை: )
கடந்த 1982ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும், எழுத்தையும் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தும் நூல் இது!
தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்டவர் மார்குவேஸ். சர்வாதிகார ஆட்சிகள் மலிந்த லத்தீன் அமெரிக்காவில் உண்டாகும் ஒவ்வொரு அரசியல் பூகம்பமும் அவரது அபிப்ராயத்தை யாசித்து நிற்கிறது. லத்தீன் அமெரிக்க மக்களின் அவல வாழ்க்கையைச் சற்றும் மிகையின்றி அப்பட்டமாகப் படம் பிடிக்கும் எழுத்து அவருடையது! நமக்கு மாய யதார்த்தமாகத் தெரியும் அவர் எழுத்து தென் அமெரிக்காவில் எப்போதும் சுடும் நிஜமாக இருக்கிறது!
மார்குவேஸ் அம்மக்களின் மனசாட்சி. இலக்கியப் பொக்கிஷம்!