நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 88. விலை: ரூ.35)
மனித ஆளுமை எவ்வாறு ஒரு காலத்தில் சிறந்து இருந்தது - அது சிதைந்து வருவது எப்படி என்று கார்க்கி எடுத்துக்காட்டுகிறார். இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி! ஒரு கலைஞனோ, எழுத்தாளனோ, தான் பிறந்த மண்ணுக்கு அப்பாற்பட்டு விலகி இருக்கக்கூடாது - விலகி நின்றால், அவனால் இறப்பில்லா இலக்கியம் படைக்க முடியாது. மக்களோடு ஒன்றி நின்று வாழ்ந்து கற்றாலன்றி, அவனால் சிறந்தவராக முடியாது என்று கார்க்கி எடுத்துக் காட்டுகிறார்.
மனிதன் தனது சூழலில் இருந்து கிடைக்கிற சிந்தனைச் சலனங்களைக் கிரகிப்பதில் வரவர புலன் உணர்ச்சி மங்கி வருகிறது. அவனது சிரிப்பொலியும் வரவர அபூர்வமாகி வருகிறது. அந்தச் சிரிப்பொலியில் ஒரு நோய்க்குணம் கொண்ட களைப்பின் தொனிகள் கேட்கின்றன. ஒரு காலத்தில் அவனிடம் இருந்த தூய்மையான நெஞ்சுத் துணிவு, நிராசையின் வெறியாக மாறி விட்டது. கார்க்கி வருத்தப்படுகிறார்.