நர்மதா பதிப்பகம், 10. நாணா தெரு, பாண்டிபஜார், தி.நகர். சென்னை.600017. தொலைபேசி: 24334397. (பக்கம் 608)
இலக்கணம் இனிக்க அமைந்த நூல். தமிழகத்திற்கு வெளியே தமிழ் வளர்ச்சிக்கு அக்கறைப்பட்டு உருவாக்கப்பட்ட நூல். எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்திருக்கும் விதம் அருமை. எத்தனை,இத்தனை, எத்தனை போன்ற சொற்கள் `கள்' விகுதி பெற்று வருமா இல்லையா என்பதற்கு பக்.450 ல் விளக்கம் காணலாம். புணரியல் பற்றிக் குறிப்பிடும் போது அதை `ஒலிச் சேர்க்கை' என்று குறிப்பிட்டு, அது தமிழுக்கு உயிர்நாடி என்றும், புணரியலை நம்முன்னோர் ஒலிவடிவத்தின் ஒரு கூறாகக் கருதினர் என்ற விளக்கம் சிறப்பானது. கடந்த சில நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்த பெருமக்கள் தந்த கருத்துக்களை விளக்கமாகக் காட்டி, நடைமுறையில் தமிழ் வளர்க்கப்பட வழிகாட்டுகிறார் ஆசிரியர்.
எளிமையான படைப்பாக இருப்பதால், பருமனாக இருந்த போதும் , இத்தடவை இரண்டாவது பதிப்பாக மலர்ந்திருக்கிறது. அதே இந்த நூலுக்கு தமிழ்மக்கள் அளித்த ஆதரவின் அடையாளம் என்றே கூறலாம்.