வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை-94. போன் : 044-23611311. (பக்கம்: 192)
ஆன்ம விடுதலைக்கு வித்திட்டவர்களுக்கு இணையானவர் அறிவியல் பிரம்மாக்கள். தம் முழு வாழ்வையும் அர்ப்பணித்து தத்தமது கண்டுபிடிப்புகளால் இன்னமும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
பொருள் என்பது துகள்களால் ஆனது. ஆற்றல் என்பது அலை வடிவம். ஒரே சமயத்தில் பொருளும் ஆற்றலும் மரபான கோட்பாடுகளில் விளக்க முடியாது (பக்.68) நீள் ஒளி மீள்வதில்லை, நேர் கோடெல்லாம் நிமிராத வளை கோடே (பக்.34) ஐன்ஸ்டீனைக் கவர்ந்த நியூட்டனின் நிறையீர்ப்பு விதி (பக்.92) என்பவை இந்நூல் தரும் பல செய்திகளில் சில.'இனிய தமிழில் 25 தலைப்புகளில் பற்பல புகைப்படங்களுடன் ஐன்ஸ்டீனின் வாழ்வையும் வாக்கையும் ஆசிரியர் அழகாக வெளியிட்டுள்ளார். அறிவியலில் நாட்டமுள்ள மாணக்கர் ஐன்ஸ்டீனின் மூன்று விதிகள் உட்பட பல அறிவியல் நன்கொடைகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் அறிவியலில் கண்டுபிடிப்பாளராகத் திகழ, இந்நூல் அவர்களின் வேட்கையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.