கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 180 )
பாரதியார் பாடல்களையும், பகவத் கீதையின் கருத்துக்களையும் இந்நூலாசிரியர் ஒப்பிட்டு மிகச் சுவையாக விருந்து வைக்கிறார். கீதையின் பக்தர்கள் சிலர் பாரதியாரின் தலைவர்கள் என்றும் (பக்.15) நாலு வகுப்பும் ஒன்றே என்பதை விளக்கியும் (பக். 68) `நான்' என்ற ஆணவம் தள்ளப்பட வேண்டும் என்பதையும் (பக். 101) கீதையை ஞானரதத்துடன் ஒப்பிட்டும் (பக். 145) பாரதியார் எதிர்ப்புகள், பாதிப்புகள், தடைகள் ஆகியவை கடந்து உலகமகா கவியாக விசுவரூபம் எடுப்பது குறித்தும் (பக். 160) நூலாசிரியர் விளக்குவது மிக அருமை.பாரதிக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் நூலாசிரியர் நன்கு ஆய்வு செய்துள்ளார். அனைவரும் படித்துப் பயனடையலாம்.