அம்ருதா பதிப்பகம், சென்னை-116. ( பக்கம்:198)
நல்ல தொரு விமர்சகரும், ஓவியம், சிற்பங்களில் தேர்ந்தவர் என்ற முறையில் சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் அனுமாரின் உச்சந்தலையில் கற்றைக் குடுமி, வேலூர்க் கோட்டையில் அமைந்த கோவிலில் உள்ள ஜ்வரகண்டேச்வரர் கல்யாண மண்டபம் பற்றிய தகவல்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் வசித்த மண்டபத்தின் எளிமை என்று பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.