சுடர்மணி பதிப்பகம், சென்னை-94. (பக்கம்: 144.)
வணிக ரீதியாக வந்து குவியும் புத்தகங்களின் நடுவே தமிழ் மூதாட்டியின் கருத்துக் கோவையாக வெளிவந்துள்ளது இந்நூல்.தமிழ் மூதாட்டியின் சிவநெறி (பக்.16), தரிசித்த கோவில்கள், வளர்த்த தமிழ், அளித்த இலக்கிய நன்கொடைகள், வேத வாக்கு, கல்விச் சிந்தனை, கொள்கைகள் வரலாறு என 39 தலைப்புகளில் 34 தமிழறிஞர்களின் கவிதை, கட்டுரை, குறிப்புரை, தொகுப்பு இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன. புலியூர் கேசிகனின் மூன்று அவ்வையார்
களின் (பக்.32) ஆய்வு சிந்திக்க வைக்கிறது.சின்ன சின்ன வரிகளில் வெண்பாவில் முத்திரை பதிக்கும் அவ்வையாரின் மூலமொழியைக் கருத்தூன்றிப் படிக்கையில், வாசகர்கள் அனைவருக்கும் பள்ளிக்கால பசுமை நினைவுகளின் அனுபவம் ஏற்படும்.