கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர்-635109. (பக்கம்: 400.)
இந்நூல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு அச்சடிக்கப்பட்டதென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"நம் வாழ்க்கை நம் கையில், நம் வழக்கு நமது வாதத்தில்' (54) " நீங்க யார் என்று யார் கேட்டாலும், இந்திய அரசமைப்பு கோட்பாடு 5 இன் படி இந்திய குடிமகன் அல்லது குடிமகள் என்று சொல்லிப்பாருங்க; உங்கமேல அவங்களுக்கு ஒரு தனி மரியாதையே வந்துவிடும்' (58) என்று தனக்குத் தோன்றியதையெல்லாம் "சட்ட அறிவுக்களஞ்சியம்' என்ற பெயரில் நியாயப்படுத்த முனைந்துள்ளார்.
வழக்கறிஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் அவநம்பிக்கைக் கொண்டுள்ள இந்நூலாசிரியரின் கருத்துக்கள் பல நூலின் தலைப்பிற்கு முரணாக உள்ளன.
நிதிஉதவி கிடைத்தால் எப்படியும் எழுதலாம் என்பதற்கு இந்நூல் ஓர் அத்தாட்சி.