கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 200.00)
காலப்பிரகாசிகை என்பது காலத்தைப் பிரகாசப்படுத்திக் காட்டுவது என்று பொருள். இதற்கு ஆங்கிலத்தில் உடூஞுஞிணாடிணிணச்டூ அண்ணாணூணிடூணிஞ்தூ என்று பெயர். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நேரம், காலம், தினம், திதி இவைகளை அனுகூலமானவைகளாகத் தேர்ந்தெடுத்து காரியங்கில் செயல்படுவதனால் நற்பலன்களே ஏற்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக காட்டுகிறது.இந்த நூலில் ஜாதகர்மா, ஆபரணம் அணிதல், காது குத்துதல், சவுளம், அச்சரப்யாசம், உபநயனம், கல்வி, உபாகர்மா, வேதங்கள் படித்தல், மந்திர உபதேசம், திருமணத்திற்கு முடிவெடுத்தல், திருமணம், நிஷேகம், பும்சவனம், விவசாயம், அறுவடை, பிரயாணம், வியாதி, மருந்து உண்ணல், யோகங்கள், திதி, நக்ஷத்திரம், கோசாரபலன், காலச்சக்கரம், கிரகணம், கனவுகளின் விளக்கம், ஷ்ரீ ஜெயந்தி, கார்த்திகை பண்டிகை, ஏகாதசி போன்ற வாழ்க்கைக்கு உதவும் எல்லாவித சடங்குகளுக்கும் ஏற்ற தினங்களையும் அதன் கலாகலன்களையும் விளக்கும் ஒரு அற்புதமான நூல். இதை ஜோதிடம் பயிலும் எல்லா ஜோதிடரிடமும் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் எனக் கூறலாம்.