பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, சென்னை -14. (பக்கம்: 196.)
பாரதியாரது ஒட்டுமொத்தக் கவிதைகளில், ""தேசிய கீதங்கள்'' எனப் பிரித்து, ஞானகுரு, பாரத நாடு, பாரத மாதா, தேசிய இயக்கம் - தலைவர்கள், பிரார்த்தனை, சரித்திர வீரர்கள், சமுதாயம், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ்ச்சாதி, பிறநாடுகள், மொழி பெயர்ப்புகள், ஜாதீய கீதம் என பன்னிரண்டு தலைப்புகளில் 65 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். ஒவ்வொரு பாடல்களுக்கும் பின்குறிப்பு ஒன்றினையும் தந்துள்ளார் பதிப்பாசிரியர். மாணவர்கள் முதல் முதியோர் வரை படித்துணர வேண்டிய புத்தகம்.