அலைகள் வெளியீட்டகம், 4/9, நான்காவது முதன்மைச் சாலை, யுனைடெட், இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 208.)
பண்பாடு என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளையும் தத்துவம் என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளையும் கொண்டது இந்த நூல். முருகனும், கந்தனும் வேறானவர்கள். வடவர், தமிழர் பண்பாட்டு இணைப்பால் முருகனும் கந்தனும் ஒருவராகிட்டனர் என்று தமது ஆராய்ச்சியின் முடிவாக நா.வானமாமலை தெரிவித்துள்ளார்.
மணிமேகலையில் கூறப்படும் பவுத்த தத்துவம் எந்தப் பிரிவினைச் சார்ந்தது என்ற ஆராய்ச்சியுடன் இரண்டாம் பிரிவாகிய தத்துவப் பிரிவு தொடங்குகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல் வாதம் என்னும் கட்டுரை உலகாயதத் தத்துவங்களை விளக்குகிறது. பேராசிரியர் வீ.அரசு வழங்கியுள்ள அனுபவ உரை இந்த நூலுக்குத் திறவுகோலாக அமைந்துள்ளது.