ருஷ்ய இலக்கிய ஜாம்பவான்களான டால்ஸ்டாப், புஷ்கின், மாக்ஸிம் கார்க்கி மற்றும் இதர ஆறு படைப்பாளிகளது 17 சிறு கதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இந்நூல். போர்க்களத்தில் படுகாயம் அடைந்த ரஷ்ய வீரன் ஒருவன் "நான்கு நாட்கள் ராப்பகலாக அனுபவிக்கும் ஜீவ - மரணப் போராட்டத்தை விவரிக்கிறது தலைப்புக் கதை. மற்றுமோர் கதையான "செங்கொடி ஓர் விசுவாசமான ரயில்வே ஊழியர் தன் உயிரைப் பணயம் வைத்துப் பயணிகளைக் காப்பாற்ற முற்படுவதைச் சித்தரிக்கிறது. எல்லாக் கதைகளிலும், மிதமிஞ்சிய சோக ரசம் மண்டிக் கிடக்கிறது! பிற நாட்டு இலக்கியங்களைச் சுவைத்து மகிழ்பவர்களுக்கும், நம்ம ஊர் "காம்ரேடுகளுக்கும் உகந்ததோர் நூல் இது!