மூல நூலாசிரியர்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்.254.)
""முதுகிலே ஒரு குடம் நீரை வைத்தால் துளிக்கூட சிந்தாமல் சுமந்து கொண்டு ஓடும்'' (34), ""குல்சாரி'' ""தானாபாயின் குலுங்கா நடையான்'' ""கிராமத்தின் புகழ் ஒளி'' என்று அவர்கள் அதைப் புகழ்ந்து கொண்டனர்'' (55) எனும் சிறப்புக்குரிய ஒரு குதிரையை மையமாக வைத்து சோசலிசமே உலக முதலாளித்துவத்திற்கு மாற்று என்பதை அடி நாதமாகக் கொண்டு புனையப்பட்ட இப்புதினத்தில் ஒரு குதிரைக்கும் அதன் உரிமையாளக் கிழவன் தானாபாய்க்கும் உள்ளப் பாசப்பிணைப்பு நம் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
இறந்து போன குதிரைப் பற்றிய கிழவனின் சோகம் புதினம் படித்து முடித்த பின்பும் நம்மை விட்டு நீங்காமல் இருப்பதே எழுத்துக்குக் கிடைத்த வலிமை. ஒரு வித்தியாசமான படைப்பு. சோவியத் சமுதாயப் போராட்டத்தை ஒரு குதிரையின் பாசப் பிணைப்பில் இழைத்து எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும்.