சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான் கான் சாலை, ராயப் பேட்டை, சென்னை- 600 014. (பக்: 104).
நாடக மேடையில் தோன்றியப் புகழ்பெற்ற 23 கலைஞர்களின் வரலாற்றை இந்நூல் தெரிவிக்கிறது. இவர்களில் பலர் திரைத்துறையிலும் மிகுந்த புகழுடன் விளங்கியவர்கள். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா முதலானோரின் நாடக வாழ்க்கையும் திரையுலக வாழ்க்கையும் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. பாலமணி அம்மையார் நாடகத்துக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார் என்ற செய்தி அவர் கலைமேல் கொண்டிருந்த ஆர்வத்தைத் தெரிவிக்கிறது.