சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 256.)
தமிழகத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.,யைத் தெரியாதவர் இருக்க முடியாது. அரசியலிலே தனக்கெனத் தூய்மையான பாதை
வகுத்துக் கொண்ட அவர், தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் மிகவும் ஆர்வம் செலுத்தி மேடைகளில் முழங்கியவர். இன்றையத் திருத்தணியும், சென்னையும் தமிழகத்திற்குக் கிடைத்தது அவரின் போராட்ட வெற்றி என்று கூறுவர். இந்நூலாசிரியர் ம.பொ.சி.,யுடன் அவரது கட்சியில் கடைசி வரை இருந்துள்ளதால், இந்நூலின் பல செய்திகள் நம்பகத்தன்மையுடனும், சுவையாகவும் அமைந்துள்ளன.
சென்னையில் ம.பொ.சி.,க்கு சிலை இல்லையே என்ற ஆசிரியரின் ஆதங்கமும் (பக்.51), ம.பொ.சி., குறித்து அண்ணாதுரையால் பாராட்டுரையும் (பக்.64-80), தமிழ்த் தென்றல் திரு.வி.க.,வின் பாராட்டும் (பக்.122) படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளன.
அன்றையத் தமிழக அரசியல் குறித்து இன்றைய இளைஞர்கள் தவறாது படிக்க வேண்டிய நூலாகும்.