அலைகள் வெளியீட்டகம், 4/9, 4ம் முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-600 024. (பக்கம்:80).
திருக்குறளுக்கு எழுதப்பட்டுள்ள பழைய உரைகளுள் மிகவும் பாராட்டப்படுவதும், பலராலும் எடுத்துச் சொல்லப்படுவதுமான சிறப்புமிகு உரை பரிமேலழகர் உரை. ஆனால், திருவள்ளுவரின் கருத்துக்கு மாறாகப் பல இடங்களில் பரிமேலழகர் எழுதியுள்ள விளக்கவுரைகளைப் படித்தால், திருவள்ளூவரே திடுக்கிடுவார் என்று நாமக்கல் கவிஞர் பல எடுத்துக்காட்டுகள் தந்து நிறுவியுள்ளார். பொதுமறை எனும் கருத்திற்கு மாறாக பல்வேறு இயல்கள். அதிகாரங்களோடு பொருத்தி உரை சொல்வது பொது நெறித் தன்மையைக் கெடுப்பதாம். நாமக்கல் கவிஞர் காட்டியுள்ளவற்றோடு, மேலும் ஒரு குறள் சேர்க்கலாம். "சான்றோன் எனக் கேட்டதாய்' என்பதில் "ஏன், கேட்டதாய் என்று சொன்னார் எனில் பெண்ணிற்குத் தானாக அறியும் அறிவு இன்மையால், பிறர் சொல்லக் கேட்டதாய் என்றார்' எனப் பரிமேலழகர் எழுதியிருப்பது எத்தனை கொடுமை!