நூலாசிரியர்: அலெக்சாந்தர் பூஷ்கின். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 250.)
பூஷ்கின், ருஷ்யாவின் முதல் எதார்த்தவாத சோக நாடகமாகிய - பரீவ் கது னோவ் (1825) மற்றும் "யெவ்கேனி ஏனேகின்' - என்ற காவியத்தின் முதற்பகுதியையும் எழுதினார்.
மாபெரும் ருஷ்ய விமர்சகரான விசரியோன் பெலீன்ஸ்கி - அதை "ருஷ்ய வாழ்க்கையின் கருவூலம்' என்று போற்றுகிறார். அவர் கடைசியாக எழுதிய "கேப்டன் மகள்' (1836) என்ற இந்த நாவல், பூஷ்கினின் கலைத் திறனை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. விசரியோன் பெலீன்ஸ்கி - இந்த நாவல் கலைத் தன்மையின் பூரணத்தை, சிகரத்தை எட்டுகிறது என்று மிக உச்சியில் வைத்துப் பாராட்டினார்.
விவசாயிகள் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட அற்புதமான படைப்பு.