தொகுப்பாசிரியர்கள்: முனைவர்கள் ராம.குருநாதன், தே.ஞானசேகரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256)
* நாட்டுப்புற இயலின் பல்வேறு கூறுகளைப் பற்றிய ஆய்வாகத் திகழ்கிறது இந்நூல்.
கள ஆய்வு நெறிமுறைகள், நாட்டுப்புறக் கதைப் பாடல் பதிவுகள் என 14 தலைப்பில் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.
கடலில் சென்று மீன் பிடித்துத் திரும்பும் மீனவர்கள் கரையை அடைந்ததும் கட்டுமரத்தில் இருக்கும் வலை அல்லது மீன் பெட்டியிலிருந்து முதன் முதலாக ஒரு மீனை எடுத்து தரையில் போடுவர். இம்முதல் மீனுக்கு `சாமி மீன்' என்று பெயர் - போன்ற பல சுவையான தகவல்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. நாட்டுப்புற ஆய்வாளருக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த நூல்.