நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. (பக்கம்: 192)
உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரி க்காவையே கொஞ்ச காலம் நடுநடுங்க வைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நூல். அமெரிக்காவை எதிர்த்த பின்தான் சதாம் பற்றி பலர் தெரிய வந்திருந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு, சிறு வயது வாழ்க்கை, இளைஞனான பின்பு தேர்ந்தெடுத்த பாதை, ஆட்சியைக் கைப்பற்றிய முறை, எதிரிகளை கையாண்ட விதம் என அத்தனை பரிமாணங்களையும் தெரிய வைக்கும் புத்தகம் இது. நூலாசிரி யர் ராஜய்யா ஒரு பத்திரிகையாளர் என்பதால் சதாமின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை ஒவ்வொருவரும் புரிய வைக்கும் நோக்கில் அழகான கதையாக சொல்லி இருக்கும் விதம் அருமை.