நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144).
இப்பரந்த உலகை காப்பதற்காகவே தீய சக்திகளுடன் போராடினார் சிவபெருமான் என்று கூறுகின்றன புராணங்கள்.
இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றபோது, சிவபெருமான் தன் கால் விரல் ஒன்றினாலேயே அவனை அழித்த வரலாற்றை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். அந்த வகையில் சில தீய சக்திகளை அழித்தருள, தாமே நேரில் சென்று அறநெறி பிறழ்ந்தவர்களை அழித்து, அருள் புரிந்த வீர வரலாறுகள் நிகழ்ந்ததாக கூறப்பட்டும் எட்டு தலங்களைப் பற்றி இந்நூல் விவரித்திருக்கிறது. இதுவே வீரட்ட தலங்கள் என போற்றி வழிபடப்படுகின்றன.
ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. வீரட்ட தலங்கள் எனப்படும் எட்டு ஊர்களுக்கும் செல்லும் வழித்தடங்களும், பிற குறிப்புகளும் மிகவும் பயனுள்ளவை. படித்து சிவனின் அருளாசியை பெறலாம்.