(பக்கம்: 426) விஜய நகர சாம்ராஜ்யம் ஹம்பி எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த முறை, ஜெயா வெங்கட் ராமன் கட்டுரை அருமையாகத் தெரிவிக்கிறது, அந்த ஹம்பி நகரின் கலைச் சிற்பங்கள் மலரின் அட்டையை அலங்கரிக்கின்றன.
சுவாமி சிவானந்தரின் கட்டுரை, இந்து மதத்தின் உயர்வை விளக்குகிறது. சுவாமி சின்மயானந்தர், மு.சீனிவாசன், பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன், ஆர்.பி.சாரதி, ராமசுப்பு, பின்னலூர் மு.விவேகானந்தன் ஆகியோரின் கட்டுரைகள் நம்மறிவிற்கு விருந் தாக அமைந் துள்ளன.
காஞ்சி மகா பெரியவரும், ஸ்ரீகுருஜி கோல்வல்கரும் சந்தித்துப் பேசிய பேட்டியில், ஊழலுக்கு தீர்வு பற்றி இருவரும் பேசியது இன்றும் பேசப்படும் விஷயம். காந்த லட்சுமி சந்திரமவுலி, எம்.என்.மணி, டாக்டர் சியாமா ஆகியோரின் பேட்டிக் கட்டுரைகளும் மிக அருமை.
கவுதம நீலாம்பரன், இந்திரா சவுந்தர் ராஜன், படுதலம் சுகுமாரன், புஷ்பா தங்கதுரை, ஜ.ரா.சுந்தரேசன், அசோகமித்திரன், ஐஸ்வர்யன், விமலா ரமணி ஆகியோரின் சிறுகதைகள் படிக்க மிக்க ஆவலைத் தூண்டி, மனநிறைவைத் தருகின்றன. பீஷ்மர் பற்றி அஸ்வினி எழுதியுள்ளார்.
கட்டுரைகளின் கீழ்ப்பகுதிகளில் ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் பாடலுக்குரிய பொருளும், மனுஸ்மிருதியின் வாக்கியங்களுக்குரிய பொருளும், பண்டித மதன்மோகன் மாளவியாவின் சுபாஷிதம் சுலோகங்களுக்கான பொருளும் தந்திருப்பது, விஜய பாரதத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
படித்தும், பாதுகாத்தும் வைக்க வேண்டிய அருமையான மலர்.