விலைரூ.120
புத்தகங்கள்
அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்
விலைரூ.120
ஆசிரியர் : ஜெயச்சந்திரன்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
பகுதி: சட்டம்
Rating
மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17. போன்: 044-24342928, 24346082 (பக்கம்: 216 )
ஆசிரியர் பரந்த சட்ட அறிவும், தொழில்நுட்பமும் தெரிந்தவர். சட்ட நுணுக்கங்களை 82 தலைப்புகளில் அழகாக விளக்குகிறார். இவர் ஊழல் தடுப்பு குற்றவழக்குகளையும் நடத்தியவர். முற்றிலும் புதுமையாக கொங்கு மண்டலத்தில் "காவலர்களின் காவலர் என்ற பட்டத்தை பெற்ற சிறப்பு வக்கீல். தமிழில் சிறப்பாக இந்நூலைப் படைத்திருக்கிறார்.
இத்தலைப்புகள் சட்ட மருத்துவம், மரண வாக்குமூலம், சடலக் கூராய்வு பற்றிய சட்டம் (மூன்று தலைப்புகளாக) சாட்சிகள், உணவு கலப்படம், ஈவ்-டீசிங் என்று பலரும் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி, சட்ட விளக்கங்களை எளிய நடையில் தந்திருக்கிறார்.
அதிலும் சடலக் கூராய்வில் தேவைப்பட்டால், பிணத்தை முழுவதும் கழுவி அதில் காயம் இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும் ( பக்கம் 51) என்று குறிப்பிட்டிருக்கிறார். தத்தெடுக்க 21 வயது இடைவெளி தேவை (பக்கம் 158) ஜீவனாம்ச தொகை வழங்க நீதிமன்றத்திற்கு உச்சவரம்பு இல்லை போன்ற பல தகவல்கள் உள்ளன.
தமிழில் அமைந்த இந்நூல், நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி நன்கு முதலில் புரிந்து கொள்ள உதவும். ஆசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது. எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல்.
வாசகர் கருத்து
- ,
how to down load this book? or How to buy via online?
- ,
GOOD
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!