விலைரூ.125
புத்தகங்கள்
Rating
பக்கம்: 166
"காவேரி எனும் பெயரில் லஷ்மி கண்ணன், தமிழ், ஆங்கிலத்தில் எழுதும் இருமொழி எழுத்தாளர். இவருடைய நூல்கள் இந்தி மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.ஒரு தமிழ்நாட்டு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த, படித்த, வேலைக்குப் போகும் பெண்களின் ஆசை, நிராசை, அபிலாசை, ஏமாற்றம் ஆகியவற்றைப் பற்றி அதிகம் சிந்திக்கும் ஒரு எழுத்தாளரின் படைப்பு, இந்த நவீனம்.குடும்ப வாழ்க்கை என்பது அவளது இயல்பான முன்னேற்றம் வளர்ச்சிக்கு முன், குறுக்கே தடையாக இருக்கிறது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் இந்த நவீனத்தில் ஏற்கத் தக்கன, ஏற்கத் தகாதவை என, பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
பெண்ணியம், பெண் விடுதலை என்ற விஷயங்கள் வெகுதூரம் பயணித்து விட்டன. வேகம், விவேகம், நிதானமின்மை, யதார்த்தத்தை உதாசீனப்படுத்தும் போக்கு, என, பயண வழியில் பல வேகத்தடைகள். அழுத்தி வைக்கப்பட்டு, ஒடுக்கி வைக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட பெண் இனம். களைய வேண்டிய சங்கிலிப்பிணைகள் இன்னமும் ஏராளம் உள்ளன. காயத்ரியும், ரமாவும், சங்கரும், துரையும், அரவிந்தும், கிரிஜாவும் என, வெவ்வேறு சிந்தனை வயப்பட்டவர்களின் வாழ்க்கையில் எங்கோ, ஏதோ ஒரு பிணைப்பு விசை இருக்கிறது. அந்த விசையைத் தேடி நகர்கிறது நவீனம். கடைசியில் சித்தார்த் என்ற குழந்தையின், மழலை முன் வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகி விடுகிறது.
ஒரு தலை முறைப் பெண் இனம் அழுது கொண்டே இருந்து விட்டது. அடுத்த தலைமுறையோ விழிப்புற்றுப் போராட துவஜம் கட்டிக்கொண்டு நிற்கிறது. இந்த வித்யாசமான வாழ்க்கைச் சூழலை இலக்கியமாகப் பதிவு செய்ய, காவேரியில் போன ஆன்மாவின் துணையை நாடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் இது. இன்னும் 40 ஆண்டுகளுக்கு வாசிக்கப்படும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!