முகப்பு » கல்வி » General Studies Paper II for Civil Service

General Studies Paper II for Civil Service

விலைரூ.1250

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: டாடா மெக்ராஹில்

பகுதி: கல்வி

Rating

பிடித்தவை

 பக்கம்: 1,396   

ஐ.ஏ.எஸ்., உட்பட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எதிர்கொள்வோருக்கு, 2011ம் ஆண்டு முதல், பாடத்திட்டம் மற்றும் தேர்வு வினாத் தாள்களின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. குறிப்பாக, ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வுக்கான பாட அமைப்பும், கேள்வி வகைகளும் முழுமையாக மாற்றப்பட்டன.இரண்டாவது தாள், தேர்வு எழுதுவோரின் கற்றல், அறிந்து கொள்ளுதல் மற்றும் இந்த இரண்டில் அவர்களுக்குள்ள நாட்டத்தினைச் சோதனை செய்வதாய் அமைந்துள்ளது.
இவர்களுக்கு உதவும் வகையில், டாடா மெக்ரா ஹில் நிறுவனம், அண்மையில், ஜெனரல் ஸ்டடீஸ் தாள்  இரண்டுக்கான வழிகாட்டி நூலை வெளியிட்டுள்ளது.இந்நூலை வடிவமைத்த கல்விப் பிரிவில்,  வல்லுனர்கள், தேர்வுக்கு இளைஞர்களைத் தயார் செய்யும் நோக்கத்துடன், பாடங்களைத் தந்து, ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும், தேர்வு வினாத்தாள் மற்றும் அவற்றிற்கான விடைகளையும் தந்துள்ளனர்.  சோதனைத்தேர்வு தாள்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து, 20 ஆக, உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல கற்றறிதல், முடிவெடுத்தல் பயிற்சி ஆகியவற்றிலும், கூடுதலாக பயிற்சி வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன.யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வு மட்டுமின்றி, மாநில சர்வீஸ் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த நூல் உதவியாக இருக்கும்.மேலும் விவரங்களுக்கு, 95000 28343 என்ற தொலைபேசியைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us