விலைரூ.155
முகப்பு » கட்டுரைகள் » சுந்தர ராமசாமியின்
புத்தகங்கள்
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
விலைரூ.155
ஆசிரியர் : ச.தில்லை நாயகம்
வெளியீடு: சாகித்ய அகடமி
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 304,
""அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம், (பக்.44) ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான், எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசு, சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக் கூடாது என்பதை, என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக, நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் (பக்.65) இப்படி சுயதரிசனம் தரும் சுந்தர ராமசாமியின், 30கட்டுரைகளை "ஆளுமையும் ஆக்கங்களும், மதிப்பீடுகளும எதிர்பார்ப்புகளும்,படைப்பாளிகளும், படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகள் ஆகிய நான்கு தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டுள்ளது.
கனவு மொழியிலிருந்து, சிந்தனையின் மொழியே உருவாக்க முயல்பவர்கள் தான், உண்மையில் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் (பக்.109) என்று கூறும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.சிந்தனைத் தெளிவும், எழுத்தில் யதார்த்தமும் கொண்ட சுராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற நாவல்களும், அவர் நிறுவிய காலச்சுவடும், தமிழுக்கு வளம் சேர்ப்பவை. தேர்ந்த கட்டுரைகள் சிறப்பாக, இதில் இடம் பெற்றுள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!