தனிமனிதனின், சமூக வாழ்வியல் நெறிகளை விளக்கும் நுால். சங்க இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ள தலைவன், தலைவி, அன்பு, இல்லற மாண்பு, விருந்தோம்பல், கல்வியின் சிறப்பு, ஒழுக்க உயர்வு, வேந்தருக்குரிய இலக்கணம், அரசியல் நெறி, இம்மை, மறுமை, நிலையாமை, பசிப்பிணி மருத்துவர் மணிமேகலை, வேளாண் சிறப்பு என வாழ்வியல் பொருண்மைகளை பட்டியலிடுகிறது.
ஆண் – பெண் சமத்துவம், பகுத்தறிவு வளர்ச்சி, மானுட மலர்ச்சி பற்றிய கூறுகளும், திருக்குறளின் மாட்சிமை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நிறைவாக கபிலரைப் பற்றிய குறிப்புகளும், பிற்காலத்தில் எழுந்த நீதி வெண்பா போன்ற அறநுால்கள் பற்றியும், இறைவனைப் போற்றி, அறநெறியை வலியுறுத்தும் சதக நுால்கள் பற்றிய தொகுப்பும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையை நெறிப்படுத்தும் சங்க இலக்கிய மாண்பை விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்