கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என விளக்கும் நுால். ரயில் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி ரசிப்பது போல நுகர வைக்கிறது.
சமையல் குறிப்புகளை கவிதையாக்கி ரசனையுடன் பார்க்க துாண்டுகிறது. அர்த்தம் உணர்ந்து சில கவிதைகளை நீட்டியிருக்கலாம் என வலியுறுத்துகிறது. ஒரு மனிதரை இரண்டாவது முறை பார்த்தால், நாயின் குணம் என்னவாக இருக்கும் என ‘நற்பெயர்’ கவிதை வழியாக உணர்த்துகிறது.
பிள்ளைகளை தேவதையாக வளர்க்கும் பெற்றோர் குரலை கேட்கச் சொல்கிறது. பாட்டு பாடி சமையல் செய்யும் பாட்டியின் ராகத்தை, பேத்தியால் ரசிக்க முடிகிறதா என, இன்றைய குழந்தைகளிடம் கேட்கிறது. கவிதையை ரசனையுடன் வாசிக்க துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்