டென்னிஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் சாதிக்க துடிப்போருக்கு உதவும் நுால். போட்டிகளில் சாதித்தவர் வாழ்க்கை பாதையை முன்மாதிரியாக காட்டும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகளில் சாதனை படைத்துள்ள, சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, நிருபாமா உள்ளிட்ட, 14 பேரின் வாழ்க்கை சுருக்கம் தரப்பட்டு உள்ளது. போட்டிகளில் வெற்றி பெற அவர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் செயல் ஊக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வீரர்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களும் தரப்பட்டு உள்ளன.
சாதனை படைக்க, வீரர்கள் எடுத்த முயற்சிகள் பற்றிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. வீரர்களின் சாதனையை முன்மாதிரியாக கூறும் நுால்.
– திசை