மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். இறப்புக்கு பின் உடல், நாயிடம் சிக்கினால் என்னவாகும் என, மரணத்தை புரிய வைக்கிறது. சவரக் கத்திக்கும், முகத்துக்குமான உறவை, கத்தி மீது நடப்பது போல் பேசுகிறது.
திரை நாயகன் நிழல் நடிப்பை, நிஜம் என கனவு காணும் தலைமுறை மீது கவலை கொள்கிறது. கடலில் விழும் ராக்கெட் துகள்களை மீன்கள் தின்றால் என்னவாகும் என உயிரினங்கள் மீது அக்கறையுடன், சூழலை பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கிறது.
அரசியல் நாற்காலி கால்களை நினைத்து, சிரிக்கும் குழந்தையின் மொழியில் அரசியல் பேசுகிறது. ஒவ்வொரு கவிதையும், நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.
கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்