அதர்வண வேதம், அதர்வ வேத சம்கிதை, அதர் வாங்கிரசம், பிரம்ம வேதம், சத்திரிய வேதம், அதர்வணம் வைஷஜ்ய வேதம் எனவும் அழைக்கப்படுகிறது. அறியாமை என்ற இருளை, ‘அதர்’ என்ற அனல் அழிப்பதால், அதர்வண வேதம் ஆயிற்று.
மந்திரம், பிரம்ம வித்தை, துஷ்ட சம்காரம், ருத்ர மகிமையால் நோய்க்கு மருந்து தருதல் போன்ற அம்சங்களை உடையது.
அதர்வ மூல சம்கிதையை, 20 காண்டங்களாகப் பிரித்து, பிரபாடங்களாக வகுத்து, அனுவாகங்களாகவும், சூக்தங்களாகவும், மந்திரங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒன்றை அடைந்து மீண்டும் அடைய முடியாத எல்லையே, மோட்சம் என்று தெளிவுடன் குறிப்பிடுகிறது. ஈயம் என்னும் உலோகம் உதவியால் எதிரிகளை அழித்துவிட வேண்டுகிறது. அதர்வண வேதத்தை தமிழில் சொல்லும் வரலாற்று ஆவணம்.
– முனைவர் மா.கி.ரமணன்