சட்டசபை விவாதங்களில் சைதை துரைசாமி பங்கேற்று பேசியதன் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். வளர்ச்சி திட்டங்களை பற்றி கேள்விகள் எழுப்பி விவாதம் புரிந்த செய்திகள் தரப்பட்டுள்ளன.
சட்டசபை பேச்சு விபரங்கள் மூன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் தொகுதி இது. அரசின் முக்கிய கொள்கைகள் அடிப்படையில் அமைந்த வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பி பதில் பெறப்பட்டுள்ளது.
முக்கிய விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களும் முறையாக தரப்பட்டுள்ளன. சட்டசபை உறுப்பினராக பொறுப்பு வகித்த மூன்று ஆண்டு காலத்தில், தொகுதி மக்கள் மற்றும் மாநில வளர்ச்சி செயல்பாட்டில் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்தும் நுால்.
– மதி