முகப்பு » ஆன்மிகம் » மகா பெரியவா (பாகம் – 11)

மகா பெரியவா (பாகம் – 11)

விலைரூ.460

ஆசிரியர் : பி.சுவாமிநாதன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காஞ்சிப் பெரியவரது பக்தர்கள் கேட்டறிந்த பெரியவாவின் பொன்மொழிகளையும், அனுபவங்களையும் எளிய தமிழில் அழகுற படைத்துள்ள நுால்.

அவற்றில் சில துளிகள் இங்கே...

* எந்த ஒரு மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு என்றால், அதற்கு முக்கியமான ஒரு காரணம், ‘ழ’ என்ற எழுத்து தான். இது வரக்கூடிய பெரும்பாலான சொற்கள் இனிமை வாய்ந்தவை. இத்தனை இனிமையை கொண்டுள்ளதால், தமி + ழ் என்று சேர்த்து தமிழ் என்று அழைக்கலாமா...

* ஆகா, ஓகோவென்று புகழ்ச்சியாக பாராட்டித் தள்ளுகிறபோது தான் கர்வம் தலை துாக்கும். கண்களில் திமிர் வரும். எல்லாரையும் எகத்தாளமாகப் பார்க்கத் தோன்றும். எவரேனும் புகழ்ந்து பேசினால், எந்த உணர்ச்சிக்கும் இடம் தரக்கூடாது

* அருளும் ஆசியும் நாம் விரும்பிப் பெறுவதல்ல... நம்மிடம் இருக்கக்கூடிய சரணாகதியை புரிந்து கொண்டு தெய்வங்களாலும், மகான்களாலும் கொடுக்கப்படுகிறது

* ஒருவருக்கு இருக்கிற உண்மையான குரு பக்தியால், வியாதி மட்டுமல்ல... எத்தகைய தீவினைகளையும் பொசுக்கி நல்வினைகளாக மாற்ற முடியும்

* மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை யாரால் வளர்க்க முடியும் என்று தெரிந்து இறைவன் அவர்களுக்கு அருள்கிறான். இது மாதிரி குழந்தைகளை வளர்ப்பதற்கு முற்பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

* மவுனம் மூன்று வகைப்படும். முதலாவது – சாதா மவுனம்; நாவசைவு இருக்காது. இரண்டாவது – பூரண மவுனம். இதற்கு வாய் மட்டுமல்ல; மனமும் ஓய்வெடுக்க வேண்டும்.

மூன்றாவது – பரிபூரண மவுனம்.இதுதான் காஷ்ட மவுனம்; நாக்கு மட்டுமல்ல; உடலின் எந்த ஒரு பகுதியும் அசையக் கூடாது. உடல், கைகள், கண்கள் உட்பட எதையும் அசைத்து, எந்த சைகையும் செய்யக்கூடாது.

முழுமையாக வாசிக்க நுாலை வாங்குங்கள்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us