இலக்கிய வகைமைகளில் புதுக்கவிதையும் ஒன்று. செய்யுள், வசனக் கவிதையாகி, புதுக்கவிதையாகி, ஹைக்கூ, சென்ட்ரியூ என உருவாக்கியுள்ளன. இந்த வரிசையில், ‘என்பா’ என்ற கவிதை வகையை அறிமுகம் செய்யும் நுால் இது.
வெண்பாவிலிருந்து உருவாகியுள்ளன இந்த கவிதை கள். ஒவ்வொன்றும் நான்கு வரிகளை உடையது. ஒவ்வொரு வரியும் சுதந்திரமானது; ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது. இந்த வகையை, படைப்பிலக்கியம் தெரியாதவரும் பயன்படுத்தலாம்.
‘வந்தனா வேறு வழியில்லாமல் காதலித்தாள்... வானத்தில் சில பறவைகள், ஏனோ துாக்கத்தில் கனவு கண்டேன் நான்... என்னவென்று சொல்வது இப்போது’ என்றவாறு அமைந்துள்ளன. புதிய கவிதைகள் விரும்பிகளுக்கு விருந்தாகும் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்