நுாற்றுக்கணக்கான கிளைக் கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக வரம் கொடுப்பதும், சாபம் பெறுவதுமாக அமைந்துள்ளன. அவை பற்றி விரிவாக உரைக்கும் நுால்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர், காந்தாரியிடம் சாபம் பெற்று பிறவிப் பயனை முடிக்கிறார். பாண்டு, அர்ஜுனன், யயாதி, பரீட்சித், ஜனமே ஜயன், அசுவத்தாமன் என, சாபம் பெற்ற கதாபாத்திரங்களாகவே உள்ளன.
குந்தி, காந்தாரி, சஞ்சயன், கிருஷ்ணர், துருபதன் போன்ற பாத்திரங்கள் வரம் பெற்றவை. துரியோதனன், பீஷ்மர் போன்ற பாத்திரங்கள் வரமும், சாபமும் பெற்றவை. இவை பற்றி விவரிக்கிறது இந்த நுால்.
- -– ராம்