திருக்குறள் போன்று வழிகாட்டியாக விளங்கும் நுால். வீட்டு நெறிப்பால் என்ற தலைப்பில் 100 செய்யுள்களுக்கு உரை விளக்கம் அருமையாக வழங்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. வினைச்சொல் நுணுக்கங்களை ஆராய்ந்து ஆன்மிக தடயங்களை காட்டுகிறது. உடலின் நிலை, பயன், நாடிதாரணை, வாயுதாரணை, அர்ச்சனை, உள்ளுணர்வு என 10 தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை மையமாக வைத்தே நகர்கிறது.
இறைவனின் வடிவத்தை ஒளியாகவும், எதிர்கொள்ளும் இன்ப நிலைகளாகவும் வலியுறுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உரை விளக்கம் ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கு உதவும். சுருக்கமாகச் சொன்னால் காலம், ஆன்மிக எல்லைகளைத் தாண்டிய இலக்கிய ரத்தினமாக உள்ள நுால்.
– வி.விஷ்வா