பன்னிரு ஆழ்வார்கள், நாலாயிரம் பிரபந்தம் பாடிய வரலாறும், பாசுரமும் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ள நுால். ஆழ்வார்கள் பெற்ற இறை அனுபவம் அழகாக காட்டப்பட்டுள்ளது.
சேர மன்னர் குலசேகர ஆழ்வார் பாம்புக் குடத்தில் கைவிட்டு பக்தியை நிரூபிக்கிறார். திருப்பதியில் படியாய் கிடந்து பவளவாய் காண வேண்டுகிறார்.
வாழும் வழி சொன்ன பெரியாழ்வார், பெருமாளுக்கே திருப்பல்லாண்டு பாடினார். விஷ்ணுசித்தர், பட்டர்பிரான் என்று போற்றினர். நிமலனை விரும்பிய நிலமகள் ஆண்டாள் பூமாலை சூட்டி, பாமாலை பாடி மகிழ்ந்ததை அழகுடன் தீட்டியுள்ளார். மதுரகவி ஆழ்வாருடன் திருமூலரை இணைத்து குரு மகிமை உரைக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களை போற்றும் ஆன்மிக நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்