வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என அழுத்தமாக பிரதிபலிக்கின்றன.
பிறரை துன்புறுத்தவோ, வருத்தவோ கூடாது என, ‘தண்டனை’ கதை, மாணவர்கள், ஆசிரியர்கள் பொறுப்புணர்வை கூறுகிறது. சிறுவர் – சிறுமியரிடம், பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, ‘கூர்நோக்கு’ அக்கறையுடன் பகிர்கிறது.
ஒரு மாணவி, காக்கையிடம் வைத்துள்ள நேசத்தை கண்முன் கொண்டு நிறுத்தி, காக்கையின் இயல்பான சிறப்பை கூறுகிறது, ‘காக்கைச் சிறகினிலே’ கதை.
எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், பொது நலனுக்கு சமூகத்தில் தனி இடம் உண்டு என்பதை ஒவ்வொரு கதையும் வலியுறுத்துகின்றன. சமூக அக்கறையுள்ள கதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்