கிராமம், மலைப்பிரதேசத்தை அப்படியே வர்ணிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பூலான்தேவி, குருகா பூர்வா கிராமம், சம்பல் பள்ளத்தாக்கு கண்முன் விரிகிறது.
முதல் கதை, பொருந்தாத காமம் பின், பொருந்திய காதலாக மாறியதை சொல்கிறது. டில்லி நகரத்தை அணு அணுவாக வர்ணிக்கிறது. ஊழியர் சங்கங்களின் பிடியில் வங்கிகள் தள்ளாடியதையும் மேலாளர்களை நடத்திய உண்மைக் காட்சிகளையும் காட்டுகிறது.
பிரதமராக இருந்த இந்திரா சுடப்பட்ட நேரத்தில் டில்லியில் இருந்த பதற்ற நிலை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் வயது முதிர்ந்த பெற்றோரை இணைத்து வைப்பதும் நெஞ்சுருகவைக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக வாழ்வை இழந்தவர் வாழ்ந்த பகுதிகள் பற்றி வர்ணிக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்