அன்பு இல்லம், கே.கே.பி., காம்ப்ளக்ஸ், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 272. விலை: ரூ.85).
இனிய கீதம்' என்ற முதல் சிறுகதையில் `புஷ்பா' என்ற பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. கடமைகள் முடிந்த பிறகே கல்யாணம் என்ற கருத்து யோசிக்க வைக்கிறது நம்மை. `பேக்கு' என்னும் கன்னடச் சொல்லை ஆட்டோ டிரைவர் தமிழில் புரிந்து கொண்டு கோபப்படுவது சுவாரஸ்யமாக கதை நகர வழி செய்கிறது.
`நல்லதோர் வீணை செய்தே' என்ற இரண்டாம் சிறுகதை பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல டானிக். சிவராமகிருஷ்ணன் நாலு பெண், ஒரு மகனைப் பெற்று நடுவிலேயே காலமாகி விடுகிறார். அவர் மனைவி தேவகி குடும்பத்தைத் தைரியமாகத் தூக்கி நிறுத்துகிறார். தன் குடும்பத்திற்கு உதவி செய்த ஜனார்த்தனின், சந்தர்ப்பத்தால் சிதைந்து போன மகள் பார்கவிக்கு தன் மகன் வசந்தியை திருமணம் செய்து வைக்கிறாள். துன்பத்தில் பெண்கள் சோகத்தில் துவண்டு போய் தொலைந்து போகாமல், தலை நிமிர்ந்து கோபுரமாய் எழ வேண்டும் என்பதை இந்த கதைச் சித்தரிக்கிறது.
`சோலை மலரே' என்னும் கதை `நாம் அடுத்தவர்களுக்காக வாழும் போதும் தான் ஆனந்தமும், மன நிறைவும் ஏற்படும் என்பதை வாச முடன் வருணிக்கிறது.