தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமான கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 13 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தன்னம்பிக்கை தரும் வகையில் வாழும் வரை போராடு, உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், சிகரங்கள் சாதனைகள் என்ற தலைப்புகளில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. தேவநேயப் பாவாணர் எழுதிய, தமிழ் மொழி ஆய்வு பற்றிய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
‘தாய்த் தமிழுக்கு மணிமகுடம் சூட்டுவோம்’ என்ற தலைப்பிலான கட்டுரை, மொழி மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. வான் சிறப்பு பற்றி குறளும், சிலம்பு நுாலும் குறிப்பிடுவதை முன்வைத்து, வாழ்வில் முக்கிய தேவை மழை என விவரிக்கிறது. அறிவியல் தகவல்களை உள்ளடக்கி கருத்துகளின் கருவூலமாக உள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்