புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் வாழ்வு செயல்பாடு சார்ந்த 12 கதைகளின் தொகுப்பு நுால்.
ஒவ்வொரு கதையிலும் மாறுபட்ட களத்தை காட்சிப்படுத்தும் அணுகுமுறை உள்ளது. உணர்ச்சிகளின் பகிர்வுகளை காண முடிகிறது. வெவ்வேறு வகை கதைமாந்தர்கள் வழியாக வாழ்க்கை சூழல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்வு நெருக்கடி, துன்பம், விளைவுகளை இயல்பான உரையாடல்கள் வாயிலாக அறிய வைக்கிறது.
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அவதிகளை சந்திப்போர் பற்றிய கதைக்களமும் உள்ளது. பிரச்னைகளை மையப்படுத்தி விறுவிறுப்பாக அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறான உளவியல் கூறுகளை வெளிப்படுத்துகின்றன. சிலவற்றில் காட்சியமைப்பு, உரையாடல்கள் நீளமாக உள்ளன. சுவையான படைப்பு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு