மகாபாரதத்தின் துணைப் பாத்திரங்களான அம்பை, அரவான், அசுவத்தாமன், யமன், சகாதேவன் உரைக்கும் தனி மொழி உரைகள், அறிந்திராத தகவல்களை தருகின்றன. அறம் சார்ந்த கருத்துகளை பகிர்கின்றன.
பெண் பாத்திரங்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி சிந்தனையை உயர்த்திப் பிடிக்கின்றன. பேரழிவிற்கும், சூதாட்ட அநீதிக்கும் முதன்மையாக நின்றவன் சகுனி என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளது. மகாபாரதத்தின் புது வாசிப்பாக உள்ள நுால்.