உடல்நலன், மனநலனை பேணும் வழிமுறையை தெரிவிக்கும் நுால். புதிது புதிதாக நோய்கள் உருவாவது குறித்து எச்சரிக்கை செய்கிறது.
மன அழுத்தத்தால் ஏற்படும் நோயின் தன்மை, ஏற்படுத்தும் பாதிப்பு, சிகிச்சை முறைகள், உணவு பழக்கம் பற்றி எடுத்து கூறுகிறது. நோய் குறித்த பயத்தை விலக்கி வைக்க வேண்டும் என்கிறது. சர்க்கரை, இதய நோய் பாதித்தால், தினமும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை பட்டியலிடுகிறது.
உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையை கூறுகிறது. உடலுக்கு ஏற்ற உணவுகளை தேர்வு செய்ய கூறுகிறது. நோய் பரப்பும் காரணிகளை கண்டறிந்து, அவற்றை தவிர்ப்பதில் உறுதி வேண்டும் என்று உரைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்